தமிழ் சினிமாவில் பலவிதமான போலீஸ் கதைகள் நாம் பார்த்து இருக்கிறோம் இந்த திரைப்படம் அதிலிருந்து சற்று புதிதாக மிக எளிமையாக கொஞ்சம் பரபரப்புடன் வெளிவந்துள்ளது இந்த குரு மூர்த்தி.
ஊட்டியில் அதிரடி போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நட்டி. இவர் முதல் நாள் ரோந்து பணிக்கு போகும் போது தன் இரண்டாம் மனைவிக்காக பங்களா வாங்க 5 கோடி பணத்துடன் செல்லும் ராம்கியை சந்திக்கிறார். இறங்கு ராம்கியை விசாரிக்கும் நட்டி தன் பணத்தை யாரோ திருடி விட்டார்கள் அதை கண்டு பிடித்து தருமாறு நட்டியிடம் கூறுகிறார் ராம்கி அந்த பணத்தை தேடும் வேட்டையில் இறங்குகிறார் நட்டி இறுதியில் அந்த பணத்தை கண்டு பிடித்து ராம்கியிடம் ஒப்படத்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
5 கோடி பணம் ஒருவர் கையிலிருந்து ஒருவர் கைக்கு மாறிக்கொண்டே இருக்கிறது அந்த பரப்புதான் படத்தின் மீதிக்கதை. படத்தை பார்க்கும் போதே அளவான செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது தெரிகிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார். ஆனால் நடிப்பில் இவரின் நடிப்பு தீனி போடும் காட்சிகளோ வசனங்களோ படத்தில் இல்லை. படத்தின் ஆரம்பத்தில் மட்டும் இவருக்கு கொடுத்துள்ள அந்த மாஸ் சண்டைக்காட்சியை தவிற.
நட்டியுடன் வரும் போலீஸ் அதிகாரிகளாக மனோ பாலா மற்றும் ரவி மரியா காமெடி என்ற பெயரில் நம் அனைவரின் பொறுமையை சோதிக்கிறார். இவர்களை தவிர மொட்டை ராஜேந்திரன், விலைமாதர்களாக வரும் சஞ்சனா,அஸ்மிதா கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திருக்கிறார்கள்.
ஜந்து கோடியை பறிகொடுத்த ராம்கி ஆன்மாவாக அலைந்து பின்னர் உயிருடன் திரும்பி வந்து நல்ல மனிதராக வாழ்கிரார். பெரிதாக இவருக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
நட்டி போலிஸ் ஜீப்பில் செல்லும் காட்சியும் ராம்கி காரில் செல்லும் காட்சியிஉம் க்ரீன்மேட்டில் எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஊட்டியை சுற்றி சுற்றி படமாக்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் தேவராஜ் அவர்களுக்கு மட்டும்தான் படத்தில் அதிக பணி சுமை இருந்திருக்கும்.
சில இயக்குநர்களுக்கு நல்ல கதை அமைவது இல்லை ஆனால் இவருக்கு மிக சரியான கதை கிடைத்தும் அதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்சியமாகவும் திரைக்கதையில் கொடுக்க தவறியதால் மிக நன்றாக கொடுத்து பாராட்டு பெற வேண்டியதை கோட்டை விட்டிருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு எல்லாம் வருமானவரி கட்டுவீர்கள் சொந்த நாட்டுக்கு மட்டும் கட்ட மாட்டீர்களா? அனைவரும் வருமான வரி கட்டி நம் நாட்டை மேலும் மேலும் உயர்த்த வேண்டும் என்ற ஒரு கருத்தை இறுதியில் பதிவு செய்கிறது இந்த குருமூர்த்தி.
Guru Murthy Review By CineTime
[wp-review id=”44781″]