News
இந்தியன் 2 பிரச்சினை முடிவுக்கு வந்தது !
இந்தியன்-2 பட விவகாரத்தில் அமைதியான முறையில் பிரச்சினையை பேசித் தீர்ப்பதற்காக இரு தரப்பினர் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளாராம் உலக நாயகன் கமல்ஹாசன். முதல் கட்ட பேச்சு வார்த்தையே சுமூக நிலையை எட்டி விட்டதாம்.
இந்தநிலையில் சென்னை வந்துள்ள லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரனை இயக்குநர் ஷங்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். குடும்ப ரீதியிலான இச்சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து ஷங்கர் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற சுபாஷ்கரன் ஒப்புக்கொண்டதாகவும் அதேபோல இந்தியன்-2 படத்தையும் முடிக்க இயக்குநர் ஷங்கர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே விரைவில் இந்தியந்2 படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..