News
மீண்டும் சூர்யா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி !

கார்த்தியின் புதிய படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளார். இதற்கு முன்பு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைகிறார்கள்.
இந்த படத்தை முத்தையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கார்த்தியின் கொம்பன் படத்தை இயக்கியவர். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பை சில தினங்களில் முடித்து விட்டு கார்த்தி இயக்குநர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து 50 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளியை நடிக்கவைக்க திட்டமிட்டு வருகிறார்களாம். இவர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.