Connect with us
 

News

முன்னணி நடிகைகள் நடிக்கும் கருங்காப்பியம் !

Published

on

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் மற்றும் காட்டேரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் புதிய திரைப்படம் கருங்காப்பியம். இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனை, ரைசா வில்சன், ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, லொள்ளு சபா மனோகர் விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இண்டர் நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.