தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்.
குரு சோமசுந்தரத்திற்கும் இந்துமதிக்கும் பிறந்த மகன் சந்தானம். இந்துமதியை முறைப்படி திருமணம் செய்யாத காரணத்தால் சிறு வயதிலிருந்தே பல அவமானங்களை சந்தித்து பெரியவனாகிறார் சந்தானம்.
கோவையில் டிடெக்டிவ் வேலை பார்த்து வருகிறார் சந்தானம். தன் தாயின் மரணத்திற்காக சூலூக்கு செல்கிறார். அங்கு சொத்து தகராறு வர அதை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று அங்கேயே இருக்கிறார் சந்தானம்.
அப்படி இருக்கும் நேரத்தில் அந்த கிராமத்தில் திடீர் திடீர் என பல மரணங்கள் நடக்கிறது. அப்படி நடக்கும் அந்த உடல்கள் எல்லாமே ரயில் தண்டவாள அருகில் வீசப்படுகிறது. நம் வாழ்க்கையில் நல்ல ஒரு கேஸ் கிடைத்திருக்கிறது என்று நினைத்து அதை கையில் எடுக்கும் சந்தானத்திற்கு தொடர்ந்து ஆபத்து வருகிறது. இந்த வழக்கை துப்பறியும் சந்தானத்தை திசைதிருப்பு சந்தானத்தை ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக சிக்க வைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்? தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்? அதை எப்படி கண்டு பிடித்தார் சந்தானம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற கதாப்பாத்திர நடித்திருக்கும் சந்தானம் இப்படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்துக்கு சந்தானம்தான் சரியான தேர்வு அதற்கு இயக்குநருக்கு வாழ்த்துக்கள். சந்தானம் பேசும் நகைச்சுவை கலந்து பேச்சு நடிப்பு படத்தின் பலம். குறிப்பாக இவருக்கும் அம்மாவுக்குமான அந்த பாச உணர்வு அம்மா இறந்ததும் இவர் காரை பூட்டி விட்டு கதறி அழும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் சந்தானம்.
நாயகியாக வரும் ரியா சுமன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சந்தானத்துடன் வருகிறார். ஆனால் இவர் உண்மையில் யார் எதற்காக சந்தானத்துடன் வந்து சேர்ந்தார் என்று தெளிவாக கூறவில்லை. இவரின் நடிப்பும் சிறப்பு.
குக் வித் கோமாளி புகழ் இப்படத்தில் இவரின் நகைச்சுவரை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இவரின் அறிமுக காட்சியில் இவர் பேசும் மலையாளம் எல்லாம் ரசிப்பு.
சந்தானத்தின் பெற்றோர்களாக வரும் குரு சோமசுந்தரம் மற்றும் இந்துமதி கொடுத்த பணியை மிக அழகாக செய்து கொடுத்துள்ளனர். துணை கதாப்பாத்திரமாக வரும் முனீஸ்காந்த், ரெடின், கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா என அனைவரின் நடிப்பும் அருமை.
2019-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஏஜெண்ட் ஶ்ரீவத்சவா படத்தை தமிழில் ரீமேக் செய்தது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால் அதை அப்படியே செய்திருக்கலாம் அதில் பல மாற்றங்களை கொண்டு வந்தது படத்துக்கு ஒரு குறையாக மாறிவிட்டது.
படத்திற்கு சரியான நாயகன் தேர்வு இருந்தாலும் படத்தின் திரைக்கதையும் காட்சி ஓட்டமும் விறுவிறுப்பும் இல்லாததால் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. அதையும் சரியாக செய்திருந்தால் மனோஜ் பீதாவுக்கு இதை விட இரு மடங்கு பாராட்டு கிடைத்திருக்கும்.
யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கலாம். அதே போலா தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கிராமத்து அழைகை மிக அழகாக காட்டியுள்ளார்.
ஹீரோ சந்தானமாக இல்லாமல், கதையின் நாயகனாக சந்தானம் நடிப்பில் மிளிர்கிறார். தன் அம்மாவை நினைத்து ஏங்கும் காட்சிகளில் எதார்த்தமான மகனாக கலங்கடிக்கிறார்
Agent Kannayiram Review By CineTime
[wp-review id=”44687″]