News

அமெரிக்காவில் சிகிச்சை ஆரம்பம் வைரலாகும் ரஜினி புகைப்படம் !

Published

on

5 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைபாட்டால். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து உயர் மட்ட சிகிச்சைக்காக சிங்கபூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு அங்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதற்கு பின்னர் வருட வருடம் அமெரிக்காவிலுள்ள மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு செய்வார். அதன்படி இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக இம்மாதம் 19-ம் தேதி அமெரிக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்றார். இவருடன் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்துள்ளது. இந்த சோதனை முடிந்து ரஜினி வெளிவரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது.

இன்னும் 3 வாரங்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர்தான் சென்னை திரும்பவுள்ளார் ரஜினிகாந்த்.

Trending

Exit mobile version