News

ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்தானம் படம் !

Published

on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என பல படங்களில் நடித்து வருகிறார் சந்தானம்.

இதில் சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த பாதம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடபடவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சபாபதி படத்தை அறிமுக இயக்குனரான ஶ்ரீனிவாசராவ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Trending

Exit mobile version