Connect with us
 

News

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் 5 படங்கள் சிவகார்த்திகேயன் மறுப்பு !

Published

on

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் அசாத்திய வளர்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்.விஜய், அஜித், சூர்யாவுக்கு பின்னர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளாம் இவருக்குதான் உள்ளது. சமீம காலமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பல படங்கள் சரியாக ஓடவில்லை தோல்வியையே சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை மொத்தமாக 75 கோடி ரூபாய் கொடுத்து தொடர்ச்சியாக ஐந்து படங்களில் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த செய்தியை நடிகர் சிவகார்த்திகேயன் முற்றிலுமாக மறுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் கடன் சுமையை ஏற்றுக்கொண்டுல்ல கே.ஜே.ஆர் நிறுவனத்துடன் இன்னும் சில படங்கள் நடிக்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளதாம். இதை முடிக்காமல் வேறு எந்த படங்களிலும் இவர் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.