News

தெலுங்கு படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ள நடிகர். தற்போது இவர் நடித்த படமான டாக்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. அயலான் மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவர் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு படமான ஜாதி ரட்னலு படத்தை இயக்கிய அனுதீப் என்பர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக உருவாகவுள்ளதாகவும். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version