Connect with us
 

News

கமல் தாலி எடுத்துக்கொடுக்க காதலியை திருமணம் செய்தார் சினேகன் !

Published

on

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சினேகன். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே பின்னர்தான் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவுள்ளார்.

சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்தனர். பெற்றோர்களின் சம்மதத்துடன் இன்று காலை 10.45 மணியளவில் சென்னையில் வடபழனி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தாலி எடுத்துக்கொடுத்து இந்த திருமணத்தை நடைத்து வைத்தார்.

இந்த திருமணத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களும் பங்கேற்றார். அதோடு மக்கள் நீதி மையம் முக்கிய நிர்வாகிகளும் இரு வீட்டார் மற்றும் நெற்றுங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.