Connect with us
 

News

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று அங்கு உடல் பரிசோதனை செய்து விட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என்று ரஜினி தரப்பில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வரும் 12 தேதி தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சென்னையில் சந்திக்க உள்ளார். எதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இது குறித்து ரசிகர்களை சந்தித்து ரஜினி பேசவுள்ளார்.

ரஜினிகாந்த் என்ன பேசவுள்ளார் என்று கேட்க அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.