Connect with us
 

News

169- வது படத்துக்கு தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

Published

on

ரஜினிகாந்த அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு 169-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.இப்படத்தை இயக்குவது யார்? தயாரிக்கும் நிறுவனம் எது? போன்ற விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

கதாநாயகி மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வை முடித்துவிட்டு படப்பிடிப்புகளை ஆரம்ப்பிக்கவுள்ளனர். ரஜினியின் புதிய படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியயோர்கள் பெயர்கள் அதிகமாக சொல்லப்படுகிறது.

தற்போது தேசிங்கு பெரியசாமி அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொளையடித்தால் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமியை ரஜினியும் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவர் சொன்ன புதிய கதையொன்று ரஜினிக்கு பிடித்து போனதால் அதில் நடிக்க ஆர்வமாகவிருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் 169-வது படத்தை தயாரிக்க 3 பட நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பட்ஜெட் விவரங்களை அவை கேட்டு இருப்பதாக சில தினங்களில் தயாரிப்பது யார்? என்பது முடிவாகும் என்றும் கூறப்படுகிறது.