News

விஜய்யின் மாஸ்டர் படத்தை பாராட்டிய ரெய்னா !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை இயக்குநர் லொகேஷ் கனகராஜ் இயக்கிவிருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மகேந்திரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கு பின்னர் திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து பான் இந்திய படமாக வெளியானது.

தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போடிகள் நடைபெற்று வருவதால் TNPL கமெண்டரில் பங்கேற்ற சென்னை அணியின் பிரபல வீரர் ரெய்னா தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பாராட்டியுள்ளார்.

மேலும் பேசிய ரெய்னா மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை என் மகனுடன் கண்டு ரசித்ததாகவும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version