News

உறுதியானது தளபதி 66 படத்தின் இயக்குநர் !

Published

on

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்து வருகிறார். தற்போது பீஸ்ட் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

பீஸ்ட் படத்தின் வேலைகள் முடிந்ததும் தளபதி இப்படத்தில் நடிக்கவுள்ளார். மிகவும் திறமை வாய்ந்த பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். அது யார் யார் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும்.

இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பான் இந்திய படமாக பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்திற்காக விஜய் அவர்களுக்கு சுமார் ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version