News

அண்ணாத்த படத்தின் வெளியீட்டு தேதி குழப்பம் தீர்ந்தது !

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி போட்டியிலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் ஒரு மாதம் தாமதமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் ஒன்று தீயாக பரவி வந்தது.

ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 முறை உறுதி செய்து அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது. ஆனால் வெளியீட்டுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் படத்தை விளம்பர படுத்தும் பணிகளை படக்குழுவினர் ஆரம்பிக்காமல் இருந்து வந்தனர்.

சில மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொரோனாவால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியானால் வசூலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அண்ணாத்த படத்தின் வெளியீட்டை பொங்கள் பண்டிகைக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

பொங்களுக்கு கொரோனா குறைந்து தமிழக திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கபடுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் சொன்ன தேதியில் அதாவது தீபாவளி பண்டிகை அன்று அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என்று பட நிறுவனம் தற்போது மீண்டும் அறிவித்துள்ளது இந்த தகவலின் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்து விட்டது குழப்பமும் தீர்ந்துள்ளது.

Trending

Exit mobile version