News
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் !

பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தை நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜை அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ், பரிசீனலையில் இருக்கும் இந்த நிலையில் விஜய்யுடன் நடிப்பதற்கு மாஸ்டர் படத்திலிருந்து படு முயற்சி செய்து வரும் நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் தயாரிப்பாளர் தில்ராஜுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்து மூன்று பிரபல நடிகைகளில் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 ஜோடி சேர்ந்து நடிக்கப்போவது யார் என்ற பதில் அக்டோபர் 15-ம் தேதி நடக்கும் படத்தின் பூஜையில் தெரியவரும்.