Connect with us
 

News

சிவகார்த்திகேயனை பதம் பார்த்த வாழ் திரைப்படம் !

Published

on

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் இரண்டாவதாக உருவான திரைப்படம் வாழ். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார்.

இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16-ம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவினர்தான் இப்படத்தின் இயக்குநர். இந்த ஒரு காரணத்தால்தான் வாழ் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

வாழ் படத்தை 3.5 கோடியில் முடித்து தருவதாக உறுதியளித்தார் இயக்குநர் அருண் பிரபு ஆனால் இந்த படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் அளவுக்கு இழுத்து விட்டாராம் அருண் பிரபு.

இந்த காரணத்தல்தான் இப்படத்தின் வெளியீட்டில் பல பிரச்சனைகளை சிவகார்த்திகேயன் சந்தித்தார். ஆனால் ஒரு வழியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தார் சிவகார்த்திகேயன்.