Connect with us
 

News

தாணு தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி !

Published

on

தமிழ் சினிமாவின் திறமையான இரு தயாரிப்பாளர் என்றால் கண்டிப்பாக கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சரியான படங்களை தேர்வு செய்து பல கோடிகள் லாபம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் விநியோகம் மற்றும் தயாரிப்பு இரண்டையும் செய்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் விஜய் நடித்த துப்பாக்கு படத்திற்கு பின்னர் இவரின் வெற்றி இறங்கவேயில்லை.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகர்களுடன் கூட்டணி வைத்து படங்களை தயாரித்து வரும் கலைப்புலி எஸ் தாணு விஜய்சேதுபதி அவர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளார்.

இரண்டு படங்களில் ஒரு படத்தை விஜய்சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளாராம். இது இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஐந்தாவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.