News

வெளியானது விஷாலின் புதிய படத்தின் தலைப்பு !

Published

on

RANA PRODUCTIONS ராணா புரொடக்‌ஷன்ஸ் விஷால் நடிக்க ஐந்து மொழிகளில் உருவாகும் திரைப்படம் லத்தி. ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடதிற்கு லத்தி என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார். மற்றும் வீரமே வாகைசூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடை பெற்று வருகிறது.இதை தொடர்ந்து “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும்.

விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.

Trending

Exit mobile version