News

தலைவி இரண்டாம் பாகம் உருவாகுமா?

Published

on

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகியுள்ள திரைப்படம் தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆர்.மனைவி ஜானகி கதாப்பாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இப்படத்தின்படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டது.தியேட்டர்களை திறந்ததும் திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த நிலையில் தலைவி 2-ம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்-அமைச்சர் ஆவது வரையுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பாகத்தில் முதல்-அமைச்சரான பிறகு நிகழ்திய சாதனைகள். அரசியல் போராட்டங்கள்,சொத்து குவிப்பு வழக்குகள், கைது, மீண்டும் தேர்தலில் நின்று ஆட்சியை கைப்பற்றியது.

இறுதியில் மரணம் வரை உள்ள சம்வங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.தலைவி படத்தின் வசனகர்த்தா மதன்கார்க்கி கூறும்போது.தலைவி படத்தில் இடம் பெற வேண்டிய சில சுவாராசியமான தகவல்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தலைவி 2-ம் பாகம் எடுத்தால் அந்த தகவல்கள் படத்தில் கண்டிப்பாக சேர்க்கப்படும்.

Trending

Exit mobile version