News
சோழர்களுடன் போட்டி போட முடியாமல் தள்ளிப்போகும் தமிழ் திரைப்படங்கள் !
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் கொண்டியும் வருகிறார்கள்.
செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் பெரும்பால திரையரங்குகளில் இன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே இருக்கிறது. பலர் டிக்கெட் கிடைக்காமலும் உள்ளனர். அது மட்டுமில்லாமல் இப்படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்த்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டு வாரங்களுக்கு பொன்னியின் செல்வன் சோழர்கள் ராஜ்ஜியம் திரையரங்கில் தொடரும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக சற்று தயக்கம் காட்டுகிறது.
அதில் குறிப்பாக அருண் விஜய்யின் பார்டர், அக்டோபர் 7-ம்தேதி வெளியாகவிருந்த காஃபி வித் காதல், சதுரங்க வேட்டை 2, காசேதான் கடவுளடா, ரீ மற்றும் தாதா ஆகிய படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.