News
குடி போதையில் என்ன பேசுது என்று தெரியாமல் உலறிய நடிகர் பாலகிருஷ்ணா !
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவரின் படங்கள் இணையத்தில் அதிகளவில் கேலிகளை சந்தித்து வருகின்றன. அவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளாக பேசி வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘யாரோ ரஹ்மானாம். ஏதோ ஆஸ்கர் விருது வாங்கியுள்ளாராம். அவரை எனக்கு தெரியாது. பாரத ரத்னா விருது கூட என் டி ஆரின் கால் தூசுக்கு சமம்.
எந்த விருதும் எங்கள் குடும்பம் தெலுங்கு சினிமாவுக்கு செய்த நன்மைக்கு ஈடாகாது’ எனக் கூறியுள்ளார்.அவரின் பொறுப்பற்ற அனாவசியமான இந்த பேச்சு இணையத்தில் கண்டனங்களை சந்தித்து வருகிறது.