News

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமியை மணமுடிக்கும் இயக்குனர் அகத்தியனின் மகள் !

Published

on

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா மற்றும் நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது.

இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் பாராட்டினர். இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் தேசிங் பெரியசாமி, இப்போது தன் படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை திருமணம் செய்ய உள்ளாராம். நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version