News

மாஸ் அப்டேட் கொடுத்து பிறந்த நாளை இரட்டிப்பு கொண்டாட்டமாக்கிய தளபதி 65 படக்குழு !

Published

on

தளபதி விஜய் நடிக்கும் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்ட போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 21 வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

சற்று முன்னர் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம் தளபதி 65 படத்தின் பர்ட்ஸ் லுக் ஜூன் 21 மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று அறிவிப்பி வெளியிட்டது.

இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

Trending

Exit mobile version