News
100 குடும்பத்திற்கு உதவி செய்த தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டெ !

கொரோனா இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையே புரட்டி போட்டுவிட்டது.
இந்த சூழ்நிலையில் நடிகர் மற்றும் நடிகைகள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவும் உதவியுள்ளார்.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார். இதற்காக அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேசன் பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.