Connect with us
 

News

இடைவிடாது அப்டேட்டுகளை கொடுக்கும் தளபதி 66 படக்குழு !

Published

on

தளபதி விஜய் தனது 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று நடந்து முடிந்து தற்போது ஜதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஜெயசுதாவும் நடிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றி அறிவிப்பு வெளியானது.

அதன் படி நகைச்சுசை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகரான ஶ்ரீகாந்த், தமிழ் நடிகையும் பாடகர் கிரிஷ் மனைவியுமான சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் இப்படத்தில் இணைவதாக அறிவித்தது படக்குழு.

காதல், குடும்பக்கதை அம்சமாக உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கிறார்கள். அதனால்தான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிந்த முகமாக படக்குழு நடிகர் நடிகைகளை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.