Connect with us
 

News

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு !

Published

on

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி நடிக்கவிருக்கும் 66-வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு அதிரடி காட்சிகள் மிக குறைவாகவும் செண்ட்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகள் அதிகமாகவும் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய்யுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஷ் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரைச்சாலையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு பாடலை படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.