News
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் லீக் !

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் Thalapathy 66 படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வரும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஶ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, மின்சாரக் கண்ணா, போன்று காதல் குடும்ப படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் உள்ளார்கள் அது ஒரு சண்டைக்காட்சி போலவும் உள்ளது. விஜய் அதில் பார்க்கும் போது மிகவும் ஸ்டைலிஸ்யாக உடை அணிந்து உள்ளார்.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது வைராக்கி வருகிறார்கள்.