Connect with us
 

News

ஜதராபாத்தில் ஆரம்பமாகும் தளபதி 66 படப்பிடிப்பு !

Published

on

பீஸ்ட் படத்திற்கு பின்னர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இது விஜய்க்கு 66-வது திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் ஹதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜதராபாத்தில் பல முக்கியமான காட்சிகளை படமாக்கவுள்ளனர் படக்குழு.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.