Connect with us
 

News

பிரம்மாண்டமான தயாரிப்பில் பிரபல வெற்றி பட இயக்குனரின் இயக்கத்தில் தளபதி 67 !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வர அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து தளபதி 66 படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் தயாரிப்பில் மீண்டும் நடிக்கவுள்ளார். அதற்குப்பின்னர் தளபதி 67 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தி ராஜூ தயாரிக்கவுள்ளார். கார்த்தி – நாகார்ஜூனா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கவுள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியானது. இப்படம் தெலுங்கில் மட்டுமெ மாபெரும் வெற்றி பெற்றது ஹிந்தியில் மோஷமான தோல்வியை சந்தித்தது.