Promos

தளபதி 67 படத்தின் பெயர் வெளியானது !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் பெயர் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் என்பதாலும் விக்ரம் என்ற மிக பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன், மிஷ்கின், அர்ஜூன், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி, மேத்யுவ் தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியானது. Bloody Sweet என விஜய் பேசும் ஒற்றை வார்த்தையுடனான இந்த புரோமோ வீடியோ வெளியானது. முழுக்க ழுக்க ஆக்‌ஷன் பாணியில் உருவாகும் இப்படத்தின் பெயர் லியோ என்று பெயர் வைத்துள்ளனர் படக்குழு.

Trending

Exit mobile version