News
லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் விஜய்?
லியோ படத்தை முடித்த பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தனது தளபதி 68 படத்தை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். த்ரிஷா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்படத்தை முடித்த பின்னர் வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
முற்றிலும் அதிகாரபூர்வமற்ற இந்த தகவல்கள் விஜய் ரசிகர்களால் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.