News
இணையத்தை கலக்கும் தல மற்றும் தளபதி சந்திப்பு !

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இந்திய முன்னால் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனியும் இன்று நேரில் சந்தித்து கொண்டனர்.
சென்னையில் இன்று இருவரும் சந்தித்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக தோனி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.
நலம் விசாரித்த தோனி பின்னர் விஜய்யின் கேரவனுக்கு சென்று சிறிது நேரம் விஜய்யுடன் அமர்ந்து பேசினார். இவர்கள் சந்தித்து கொண்ட புகைப்படங்களை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் டுவிட்டரில் பதிவிட்டு இன்று முழுவதும் தல தளபதியின் புகைப்படங்கள் நிமிடத்துக்கு நிமிடம் வெளிவரும் என்று பதிவிட்டுள்ளார்.