News

ஜெயிலர் பட வெற்றிக்கு நெல்சனுக்கு வாழ்த்து கூறிய தளபதி விஜய் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.29.46 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலுங்காணாவில் ரூ.12.04 கோடியையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடியும் கேரளாவில் ரூ.5.38 கோடியும் வெளி நாடுகளில் ரூ.32.75 கோடியும் என மொத்தமாக ஒரு நாளில் உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படம் வெற்றியடைந்தற்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார் தளபதி விஜய்.

ஜெயிலர் திரைப்படத்தின் கதையை நடிகர் ரஜனியிடம் கூறச் சொன்னதே விஜய்த்தான் என்று ஜெயிலர் பட ஆடியோ விழாவில் நெல்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version