Connect with us
 

News

5 மொழிகளில் வெளியாகும் தளபதி விஜய்யின் படம் !

Published

on

தளபதி விஜய் மாஸ்டர் படத்துக்கு பின்னர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது தளபதியின் 65-வது திரைப்படம். இப்படத்தில் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் நடைபெற்றது.

பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகேவுள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இப்படத்துக்கு பின்னர் தளபதி 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி தமிழில் வெளியான கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர். இதை தவிர தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மகிரிஷி, ராம் சரண் நடித்த எவடு, ஜீனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவன், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர்.

விஜய்யின் 66-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.