News

தளபதி ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு இன்ப அதிர்ச்சி படக்குழு !

Published

on

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அப்டேட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பாக இது இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Trending

Exit mobile version