Connect with us
 

News

வெளியானது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Published

on

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களுக்கு பின்னர் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இப்படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நெல்சன் மற்றும் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.

ரசிகர்கள் பலரும் இப்படத்தின் தலைப்பு. Target என்று சொல்லிக்கொண்டுருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு Beast என்று பெயர் வைத்துள்ளாதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இதை கொண்டாடி வைரலாக்கி வருகிறார்கள்.

வெளியான அந்த போஸ்டரில் விஜய் மாஸ்ஸாக கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் காட்சியை பார்த்தாலே தெரிகிறது அனல் தெறிக்கும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகத்தான் இருக்கும். தளபதி ரசிகர்களுக்கு ஒரு மாஸ் படம் தயாராகிறது.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் விடிவி கனேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.