Connect with us
 

News

டெல்லிக்கு பறந்த தளபதியின் பீஸ்ட் படக்குழு !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி பாபு, இயக்குநர் செல்வராகவன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது வரையில் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படக்குழு படப்பிடிப்புக்காக சென்னை சென்றுள்ளது. அங்கு இரண்டு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதோடு பீஸ்ட் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விடும் என்று சொல்கிறது படக்குழு. ஏற்கனவே சென்னையில் விஜய் – பூஜா ஹெக்டே பங்கேற்ற டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு விட்டது.

தற்போது பீஸ்ட் படத்தில் பாடல் காட்சிகளும் ஒரு சில சண்டைக்காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.