News
இறுதிக்கட்டத்தை நெருங்கிய விஜய்யின் வாரிசு !

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு என பலர் நடித்து வருகிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் முழுமையாக முடிவடைய இன்னும் 2 பாடல்களும், 2 சண்டை காட்சிகளும் மட்டுமே படமாக்கபட வேண்டியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
அதே போல முன்னரே அறிவித்தது போல அடுத்த வருடம் பொங்கள் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளது.