Connect with us
 

News

தளபதி விஜய் அவர்களின் சாதனையை முறியடிக்க ஒருவரால் மட்டுமே முடியும் !

Published

on

தளபதி விஜய்யின் 65-வது படம் பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நேற்றி முந்தினம் நெல்சன் பிறந்தநாளை முன்னிட்டும் நேற்று தளபதி பிறந்த நாளை முன்னிட்டும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பீஸ்ட் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது பீஸ்ட் பர்ஸ்ட் லுக் டுவிட்டரில் சாதனை படத்துள்ளது. வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் இந்திய அளாவில் அதிக லைக்குகளை பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை பீஸ்ட் பட போஸ்டர் படத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு 71 ஆயிரம் லைக்குகள் பெற்றதுதான் சாதனையாக இருந்து வந்தது ஆனால் பீஸ்ட் பட போஸ்டர் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

பொதுவாகவே விஜய்யின் சாதனையை யாரும் முறிக்க முடியாது என்ற ஒரு கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் சாதனையை அவரே மீண்டும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.