News

14 வருடத்திற்கு பின்னர் கேரள ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் !

Published

on

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தி கோட் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சுமார் 14 வருடத்திற்கு பின்னர் கேரளா சென்றுள்ளார். விஜய்யை மிக உற்சாகமாக வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் இறுதியாக சித்திக் இயக்கத்தில் வெளியான காவலன் படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். அதன் பின்னர் எந்த ஒரு படப்பிடிப்புக்காக கேரளா செல்லவில்லை.தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிக்கு சென்றுள்ளார்.

இதன் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் படமாக்கப்படவுள்ளது. சுமார் 4 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Trending

Exit mobile version