Connect with us
 

News

தளபதி 68 படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்கா சென்ற தளபதி விஜய் !

Published

on

லியோ படத்தின் வெளியீட்டை தொடர்ந்து தனது 68 படத்தில் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளார் தளபதி விஜய்.

இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க கல்பாத்தி அகோரம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் 3டி VFX டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் வெளியீட்டுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக விஜய் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.