Connect with us
 

News

தளபதி விஜய் நடிக்கும் 69-வது படம் உறுதியானது !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் விஜய் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக தளபதி விஜய் அவர்கள் அறிவித்திருந்தார்.

ஆனால் விஜய்யின் கடைசி படம் கோட் படம்தாம் அடுத்த ஒன்றரை ஆடுகளில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டிட அதற்கான வேலைகளில் ஈடுபட போதாக செய்திகளும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி தனது 69வது படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாக விஜய்யின் நெருக்கமான தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் வரும் அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.