News

ரஷ்யாவிற்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு !

Published

on

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கும் தனது 65-வது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடி ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் ஆரம்பமாகவுள்ளது. அது முடிந்தவுடன் படக்குழு செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா செல்லவுள்ளது. அங்கு சென்று படத்தின் இறுதிக்கட்ட அதிரடி ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகளை படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version