News
தளபதி விஜய்யின் பீஸ் பட தலைப்பு கடும் எதிர்ப்பு !

தளபதி விஜய் நடிக்கும் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கிவருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று நெல்சன் மற்றும் தளபதி பிறந்த நாளையொட்டி வெளியானது. தளபதி 65 படத்துக்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தை கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளாது. அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவிட்டுள்ள பதிவில்.
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழ் மொழியில்தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களை வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்புயுள்ளது.
மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என விஜய்க்கு வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளனர்.