News
ஒரே ஆண்டில் ரூ.80 கோடி வாரி செலுத்தி தளபதி விஜய் சாதனை !
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நடிகர் மற்றும் நடிகைகள் பட்டியலை தனியார் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.இந்த பட்டியலில் இந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.90 கோடி வரி செலுத்தி முதல் இடத்திலும் தளபதி விஜய் ரூ.80 கோடி வரி செலுத்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
ரூ.75 கோடி வரி செலுத்திய சல்மான்கான் மூன்றாவது இடத்திலும், ரூ.71 கோடி வரி செலுத்தும் அமிதாப்பச்சன் நான்காவது இடத்திலும், ரூ.42 கோடி வரி செலுத்தும் அஜய்தேவ்கான் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ரன்வீர் கபூர் ரூ.36 கோடியும், ஹிருத்திக் ரோஷன் ரூ.28 கோடியும், கபில் ஷர்மா ரூ.26 கோடியும், கரீனா கபூர் ரூ.20 கோடியும், ஷாகித் கபூர் ரூ.14 கோடியும், மோகன்லால் ரூ.14 கோடியும், அல்லு அர்ஜுன் ரூ.14 கோடியும், கியாரா அத்வானி ரூ.12 கோடியும், கத்ரினா கைப் ரூ.11 கோடியும் வருமான வரியாக செலுத்தி உள்ளனர்.