Connect with us
 

Trailer

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த கோட் படத்தின் ட்ரைலர் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்று வருகிறது.

தளபதி விஜய்க்கு இப்படம் 68-வது படமாகும் முதல் முறையாக வெங்கட் பிரபு – தளபதி விஜய் இணைந்துள்ள இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு அதிக எதிர் பார்ப்பு உள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் 3 கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டது படக்குழு. அதிரடி ஆக்சன் மற்றும் டீஏஜிங் காட்சிகள் என படத்தின் மீது உள்ள ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த டிரைலரில் தோன்றும் இளம் வயது உடைய விஜய்யின் தோற்றம் ரசிகர்களை ஆச்சரிப்பட வைத்துள்ளது. டீஏஜிங் தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள விஜய்யின் தோற்றம் அச்சு அசலாக சிறு வயதில் உள்ள விஜய்யை பார்ப்பது போலவே உள்ளது.