Reviews

Thalli Pogathey – Movie Review !

Published

on

டந்த 2017-ம் ஆண்டு நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் நின்னுக்கோரி. இப்படத்தின் ரீமேக்காக தமிழில் வெளியாகியுள்ள திரைப்படம் தள்ளிப்போகாதே.

Movie Details

அதர்வா – அனுபமா பரமேஸ்வரன் இருவரும் காதலித்து வருகிறார்கள். அனுபமா வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். இதனால் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அதர்வாவைக் கட்டாயப்படுத்துகிறார். தன்னுடையை பி.ஹெச்டி படிப்பு முக்கியம் என கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அதர்வா. அதன் பின்னர் அனுமபாவுக்கு அமிதாஷ் பிரதானை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் வெளி நாட்டிலிருக்கும் அதர்வா அனுபமாவை சந்திக்கிறார். நீ உன் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என அதர்வா அனுபமாவிடம் சொல்ல அதை மறுத்து விடுகிறார் அனுமபா. அதனால் நடக்கும் விவாதத்தில் அனுபமா வீட்டில் வந்து அதர்வா 10 நாட்கள் தங்குவதெ முடிவாகிறது. இதற்கு அனுபமா கணவனான அமிதாஷூம் சம்மதம் கொடுக்கிறார். நான் அங்கு வந்து தங்கும் அந்த 10 நாட்களில் என் மீது உள்ள காதலை மறக்க முடியாமல் அனுபமா இருந்தால் நீ என்னுடன் வரவேண்டும் என்று சவால் விடுகிறார் அதர்வா அதில் யார் வெற்றி பெற்றார் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தெலுங்கில் அதர்வா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நானி நகைச்சுசை கலந்த நடிப்பால் அந்த படத்தை பெரும் வெற்றிபடமாக மாற்றியிருப்பார்.

அதாவது உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவரது நடிப்பு நன்றாக இருந்தது அதை அதர்வா இதில் கொண்டுவர தவறிவிட்டார்.

அதர்வாவை காதலிக்கும் போது நம்மை ரசிக்க வைக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அதன் பின்னர் முன்னால் காதலனா இல்லை கணவனா என இருவருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் காட்சிகளில் இவரின் நடிப்பும் எமோஷனலான காட்சிகளில் அதை சரியாக கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆர்.கண்ணன் இதற்குமுன் இயக்கிய ரீமேக் படங்கள் ஓரளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால், இந்த படம் சற்று ஏமாற்றம் தான்
Cinetimee

படத்தின் மையக்கருத்தே அதர்வாவுக்கும் அனுபமாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் எப்படி காதலாக மாறுகிறது என்றுதான். ஆனால் அது இப்படத்தில் மிகவும் யதார்த்தமாக இருப்பதால் படம் பார்க்கும் நமக்கு ஒற்றுபோகமுடியவில்லை.

ஒரு பெண் இந்த அளவுக்கு ஏமாளியாகவா இருப்பார் என்று அனுபமா கதாப்பாத்திரத்தை பார்க்கும் போது கேட்க தோன்றுகிறது. அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமே அதர்வா பேசுவதை மட்டுமே நம்பும் அளவுக்கு ஏமாளி குடும்பமாக இருக்கிறார். யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஏமாற்றிவிடலாம் போல என நினைக்க வைக்கிறது.

தெலுங்கில் வெளியான பல படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ள இயக்குநர் ஆர்.கண்ணன் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போலவே இருந்தது.

படத்தில் காமெடிக்கு என்று யாரும் இல்லை அனுபமாவின் அப்பா ஆடுகளம் நரேன் மாமாவாக வரும் காளி வெங்கட் இருவரும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பெரிதாக எடுபடவில்லை. சண்முக சுந்தத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு எந்த விதத்தில் பலன் கொடுக்கவில்லை.

நல்ல உணர்வுபூர்வமாக சொல்ல வேண்டிய கதையை பொருந்தாத நடிகர் தேர்வு செயற்கையான காட்சி அமைப்பு என தள்ளிப் போகாதே படம் நம்மை ஏமாற்றிவிட்டது.


மொத்தத்தில் தள்ளிப் போகாதே தடுமாற்றம்

Trending

Exit mobile version