Connect with us
 

News

குருதி ஆட்டம் படத்தின் இயக்குநரின் நன்றியும் மன்னிப்பும் !

Published

on

8 தோட்டாக்கள் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் Sri Ganesh இவரின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் குருதி ஆட்டம். 5 வருடங்களுக்கு பின்னர் இப்படம் வெளியானது. சில காரணங்களால் இப்படம் இத்தனை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.

ஆனாலும் இப்படத்தின் இயக்குநர் Sri Ganesh மேல் ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்து இப்படத்தை திரையில் பார்க்க சென்றனர். ஆனாலும் இப்படத்திற்கு கலவையான விமர்சங்கள் கிடைத்தன. அது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.

இந்த நிலையில் இயக்குநர் Sri Ganesh தனது முகனூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் ‘ நன்றி & மன்னிப்பு எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. அந்த ஆதரவுக்கு இணையான வார்த்தைகள் என்னிடம் இல்லை. படத்தில் இருந்த குறைகளுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடினமாக உழைத்து அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுப்பேன். அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் விட்டவர்களுக்காக ஆஹா ஓடிடியில் செப்டம்பர் 2-ம் தேதி முதல் வருகிறது எனவும் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.