News
இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் ஜார்ஜியாவிற்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு !

நெல்சன் திலீப்க்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக உருவாகிவரும் பீஸ்ட். இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்து விட்டது.
முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்து தற்போது மீண்டும் சென்னையில் கோகுலம் ஸ்டுயோவில் நடைபெறவுள்ளது. அதற்காக அங்கு ஒரு பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிக்காக மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது பீஸ்ட் படக்குழு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அங்கு வில்லனும் விஜய்யும் மோதும் மிகப்பெரிய சண்டைக்காட்சி உள்பட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.